- Song Book:
Jebathotta Jeyageethangal
S.J.பெர்க்மான்ஸ்
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு ப்ரொமோஷன் (promotion) நிச்சயம்
மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே
வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவார்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்