- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
நான் கடந்து வந்த பாதைகள் கரடுமேடுகள்
நான் நடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்
நடக்கமுடியல டாடி (இயேசுவே) நடக்க முடியல
தாங்கி கொள்ளுங்க கரத்தில் ஏந்தி கொள்ளுங்க
என் சுயபெலத்தால் ஒடிப்பார்த்தேன் ஒடமுடியல
என் மனபெலத்தால் நடந்துப்பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்துப்பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்துப்பார்த்தேன் கடக்க முடியல
- நடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல
- நடக்க முடியல